24 June 2016

சூரிய நமஸ்காரம்..!

பூமியில் உள்ள எல்லா சக்திகளுக்குமே மூலக் காரணம் சூரியன்தான். அந்த சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. இதனால்தான் சூரிய நமஸ்காரம் என்கிற யோகக்கலையையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். எப்படி சூரியன் வழியாக நம் பூமிக்கு சக்திகள் கிடைக்கின்றனவோ, அதுபோல் சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதன் மூலமும் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சக்திகள் கிடைக்கின்றன.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும், மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகிறது. ஏராளமான கரியமில வாயுவும் பிற நச்சுப் பொருள்களும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஜீரண மண்டலத்திற்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இடமில்லாமல் போகிறது. மேலும், வயிற்று உறுப்புக்களில் ரத்தம் தங்குவதில்லை என்பதால் உடல் உறுதியாகிறது.

இவற்றோடு, சிறப்பு பலனாக நம் நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதாவது, தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் ரத்தக் கொதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது. இதயத் துடிப்பும் சீராகிறது. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் இது உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவுக்கும் சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது உடலில் இருந்து வியர்வைத் துளிகள் வெளியேறும். அதன் மூலம் உடலில் உள்ள ஏராளமான நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறுகின்றன. எந்த அளவுக்கு வியர்வை வெளிவருகிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் ஏற்படும்.

மேலும், சூரிய நமஸ்காரத்தில் நம் கழுத்தானது முன் பின் வளைக்கப்படுகின்றது. இதனால் தைராயிடு, பாராதைராயிடு சுரப்பிகளுக்கு ரத்தம் சீராக கிடைக்கின்றது. அவை சிறப்பாக செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான பணிகளைச் செய்கின்றன. இதன் மூலம் தோலானது புத்துணர்வு பெற்றுப் பொலிவு பெறுகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்ய உகந்த நேரம் காலைதான். வெறும் வயிற்றில்சூ, ரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் செய்தால் நல்லது.


செய்யும் முறை:



<< double click on the image to zoom it>>

ஒவ்வொரு சூரிய வணக்கச் சுழற்சியும் இரண்டு தொகுப்புக்களைக் கொண்டது. இந்த 12 யோகா தோற்ற நிலைகளும் சேர்ந்து ஒரு தொகுதியாகின்றன. இரண்டாவது பகுதியினைச் செய்து முடிக்க அதே தோற்ற நிலைகளை மீண்டும் செய்து, (மேழே கொடுக்கப் பட்டுள்ள 4 மற்றும் 9 வது படியில்) வலது காலுக்குப் பதிலாக இடது காலை நகர்த்த வேண்டும். சூரிய நமஸ்காரத்தினைச் செய்வதில் நீங்கள் பல்வேறு காட்சி விளக்கங்களைக் கண்டிருக்கலாம். ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றி சீராகப் பயிற்சி செய்தல் சிறந்ததாகும். எத்தனை சுற்று  வேண்டுமானாலும் செய்யலாம்.
காணொளிக்கு கீழே click செய்யவும்.
http://youtube.com/watch?v=8EEtz_y_C4U


No comments:

Post a Comment